×

டி20 உலக கோப்பை பாடல் வெளியீடு

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் ஷார்ஜா மற்றும் துபாய் மைதானங்களில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பிரபல பாடகிகள் ரியா துகால், சிம்ரன் துகால், ஸோ சித்தார்த், சுசிதா ஷர்க் ஆகியோர் அடங்கிய ‘WISH’ மகளிர் இசைக்குழுவினர் ‘வாட்எவர் இட் டேக்ஸ்’ என்ற இந்த பாடலை பாடியுள்ளனர். பே மியூசிக் சவுத் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு பார்த் பரேக் இசையமைக்க, மிக்கி மெக்லியாரி இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வீடியோவும் நேற்று யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

The post டி20 உலக கோப்பை பாடல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,ICC Women's World Cup T20 ,Sharjah ,Dubai ,Dinakaran ,
× RELATED இணையதளத்தில் சூதாட்ட வழக்கில் 2 நடிகைகளிடம் ஈடி வாக்குமூலம்