×

இணையதளத்தில் சூதாட்ட வழக்கில் 2 நடிகைகளிடம் ஈடி வாக்குமூலம்

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பும் பாகிஸ்தானியர்களுக்குச் சொந்தமான பந்தய இணையதளம் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. மேஜிக்வின் என்ற அந்த போர்ட்டல் தொடர்பாக கடந்த வாரம் டெல்லி, மும்பை, புனே நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த போர்ட்டலை விளம்பரப்படுத்தியது தொடர்பாக பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் மற்றும் தொலைக்காட்சி நடிகை பூஜா பானர்ஜி ஆகியோரை உரிய முறையில் வாக்குமூலம் அளிக்கும்படி அமலாக்கத்துறை கேட்டுக்ெகாண்டது. அதன் அடிப்படையில் அகமதாபாத் ஈடி அலுவலகத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் தனது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் மின்னஞ்சல் மூலம் தனது வாக்குமூலத்தை வழங்கினார். அதே நேரத்தில் நடிகை பூஜா பானர்ஜி, ஈடி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

The post இணையதளத்தில் சூதாட்ட வழக்கில் 2 நடிகைகளிடம் ஈடி வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : ED ,New Delhi ,Enforcement Directorate ,T20 World Cup ,Delhi ,Mumbai ,Pune ,Magicwin… ,
× RELATED மதுபான முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம்...