×

லேவர் கோப்பை டென்னிஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிடத்தில் நீடிக்கும் ஐரோப்பிய அணி சாம்பியன்

பெர்லின்: லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக அணியை 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஐரோப்பிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஊபர் அரங்கில் நடந்த இந்த தொடரில், முன்னாள் நட்சத்திரங்கள் போர்க் தலைமையிலான ஐரோப்பிய அணியும், ஜான் மெக்கன்ரோ தலைமையிலான உலக அணியும் மோதின. ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக விலகிய நிலையில் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), டேனியல் மெட்வதேவ் (ரஷ்யா), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), பிளாவியோ கொபால்லி (இத்தாலி), ஜான் லெனார்ட் ஸ்ட்ரப் (ஜெர்மனி) ஆகியோர் பங்கேற்றனர்.

உலக அணி சார்பில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்சிஸ் டியஃபோ, பென் ஷெல்டன், அலெஜாண்ட்ரோ டபிலோ (சிலி), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜென்டினா), தனாசி கோக்கினாகிஸ் (ஆஸி.) ஆகியோர் களமிறங்கினர். பரபரப்பான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களின் முடிவில் ஐரோப்பிய அணி 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்று லேவர் கோப்பையை கைப்பற்றியது. ஐரோப்பிய அணி 10-11 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதிய அல்கராஸ் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ஐரோப்பிய அணி பெற்ற 13 புள்ளிகளில் அல்கராஸ் 8 புள்ளிகளை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

The post லேவர் கோப்பை டென்னிஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிடத்தில் நீடிக்கும் ஐரோப்பிய அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Lever Cup Tennis ,World Test Championship ,Berlin ,Uber Arena ,Berlin, Germany ,Borg ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து கனவு நொறுங்கியது