×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து கனவு நொறுங்கியது

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 2 அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் சம்பள அபராதம் உட்பட 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகளை கழித்து ஐசிசி தண்டனை வழங்கியது. அது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 3 புள்ளிகள் கழிக்கப்பட்டதால் நியூசிலாந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் 55.36% புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அப்படி பெற்றாலும் அந்த அணி பைனலுக்கு தகுதி பெறுவதற்கு 90% வாய்ப்பில்லை என்பதால் பைனலுக்குச் செல்லும் வாய்ப்பை நியூசிலாந்து கிட்டத்தட்ட இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால் கூட இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து கனவு நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Zealand's World Test Championship ,Christchurch ,New Zealand ,England ,Christchurch, New Zealand ,2025 World Test Championship ,World Test Championship ,Dinakaran ,
× RELATED சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து 8...