ஈரோடு, செப்.24: ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் போன்றவை இருப்பு வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று மின்னணு வாக்குப்பதிவு கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது, ஈரோடு ஆர்டிஓ சதீஸ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.