×

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்

சேலம்: ஓமலூர் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ குறித்து பரபரப்பான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பில்லி சூனியம், செய்வினை, ஏவலை சிறப்பாக செய்வார் என கூறப்பட்டுள்ளதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் (57). இவரை பற்றி ஓமலூர் பகுதியில் பரபரப்பான நோட்டீஸ் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! கொல்லிமலை புகழ் மாந்திரீக சக்கரவர்த்தி சித்தர்  கருப்பூர் வெற்றிவேல் சுவாமிகள், மக்களுக்காக அனைத்து விதமான பில்லிசூனியம், ஏவல், செய்வினை போன்ற சகல வித்தைகளையும், தனது கைதேர்ந்த சிஷ்யர்களால் செய்து தரப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது விவரங்கள் ரகசியமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளப்படும். அணுகவேண்டிய முகவரி. வெற்றிவேல் சுவாமிகள், கருப்பூர், சேலம் என எழுதப்பட்டு அவரது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தனர். அதில் அவரது புகைப்படத்தையும் அச்சடித்திருந்தனர்.

முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல், அந்த பகுதியில் பிரபலமானவராக இருப்பதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவருக்கும் அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மர்மநபர்கள் தனது புகைப்படத்தை வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,’ என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Billy the Witch ,Maggie MLA ,Salem ,Omalur ,Majhi MLA ,Billy ,Salem District ,Omalur Constituency Ademuga ,MLA ,Billy Sorcerer ,Maji MLA ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி