×

கும்மனூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு

புழல்: செங்குன்றம் அருகே கும்மனூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்றார். செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம், கும்மனூர் ஊராட்சி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கும்மனூர் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான வே.கருணாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வேதா, ஊராட்சி திமுக செயலாளர் அரசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு திமுகவின் செயல்பாடுகள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் எப்படி செயல்பட வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய திமுக நிர்வாகிகள், கும்மனூர் ஊராட்சியின் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

The post கும்மனூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kummanur DMK ,Sudarsanam MLA ,Puzhal ,Sengunram ,Kummanur ,Ambedkar ,DMK ,Kummanur panchayat DMK ,Cholavaram ,Dinakaran ,
× RELATED ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்