- பெரம்பலூர் காரை கிராமம்
- Padalur
- பெரம்பலூர்
- எஸ்பி.ஆதர்ஷ் பசேரா
- பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு
- பெண்கள்
- சிறப்பு
- எஸ்எஸ்ஐ.மருதமுத்து
- மாவட்ட புகையிலை தடுப்பு மையம்
- டாக்டர்
- வனிதா
- ஆலத்தூர்
- பெரம்பலூர் காரை
- தின மலர்
பாடாலூர், செப். 21: பெரம்பலூர் எஸ்பி.ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்எஸ்ஐ.மருதமுத்து, மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஆலோசகர் மருத்துவர் வனிதா ஆகியோர்கள் இணைந்து ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்எஸ்ஐ பேசுகையில், மாணவ மாணவிகளிடம் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க எண் 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர.
மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) ஏற்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், குழந்தை திருமணத்தை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். மேலும் போதைப்பொருட்கள் குறித்த தகவலை தெரிவிக்க, ‘10581’ என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் காரை கிராமத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் காரை கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.