×

மருத்துவரின் அறிவுரையை மீறி மது குடித்தவர் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி, ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர்(50), டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதையில் சாலையில் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. உடனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடிப்பழக்கம் உடைய ஞானசேகர் கடந்த சில வாரங்களாக ரத்த வாந்தி எடுத்து வந்ததாகவும் இது குறித்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது இனிமேல் குடிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஞானசேகர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து குடித்து வந்த நிலையில் நேற்று குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து போனது தெரியவந்தது.

The post மருத்துவரின் அறிவுரையை மீறி மது குடித்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Gnanasekar ,Anjaneyar Koil Street, Poontamalli ,Dinakaran ,
× RELATED சிறை கைதிகளிடம் செல்போன், கஞ்சா...