×

வெளிநாடுகளில் இருந்து திருவாரூர் வந்த 3 பேருக்கு ஒமிக்ரானா?

திருவாரூர்: தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தம்பதி, கடந்த வாரம் துபாய் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். இதைதொடர்ந்து சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தம்பதிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல் திருவாரூரை சேர்ந்த 45 வயது நபர் ஒருவரும், கடந்தவாரம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னர் உறுதி செய்யப்படும் என்றார்….

The post வெளிநாடுகளில் இருந்து திருவாரூர் வந்த 3 பேருக்கு ஒமிக்ரானா? appeared first on Dinakaran.

Tags : Omigran ,Tiruvarur ,Tamil Nadu ,Tiruthurapoondi ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் கத்திரி...