பெரம்பலூர், செப்.20: குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ5000 வழங்க வலி யுறுத்தி பெரம்பலூரில் (பிஎம்எஸ்) பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) சார்பில், குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ5000 வழங்க வேண்டும், ஓய்வூதி யத்துடன் பஞ்சப் படி இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, நேற்று(19ஆம்தேதி) காலை 11மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாநில துணைத் தலைவர் மணிவேல் தலைமை வகித்தார்.
ஒரு பெண் உள்பட 20 பேர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர் முக உதவியாளர் வைத்தி யநாதன் என்பவரிடம் தங்க ளது கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் சர்க்கரை ஆலையின் தொழிலாளர் கள், ஏனைய ஓய்வூதிய தொழிலாளர்கள் அனைவ ரும் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனுவை அளித்த பிறகு மாநில துணைத்தலைவர் மணி வேல் தெரிவித்ததாவது :
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாயை 5000 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும், 5000 த்தை உயர்த்திய பிறகு அவர்களது பஞ்சபடியை அதனுடன் இணைத்து சேர்த்து அவர்களுக்கு வழங்கவேண்டும், 3 வது கோரிக்கையாக பென்ஷன் வாங்கும் ஓய்வூதியர் அனைவருக்கும் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத் தில் சேர்த்து அவர்களுக்கு ஒரு நல்ல பலனைக் கொடுக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மாவட்டக்கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புமாறு மாவட்டக் கலெக்டரிடம் மனு வழங் கப்படுகிறது. இந்த மனு வின் கோரிக்கை 90 நாட்க ளில் நிறைவேற்றாத பட்சத் தில் நாடு தழுவிய ஆர்ப் பாட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
The post குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.5000 வழங்க கேட்டு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.