- உலக சுற்றுச்சூழல் தினம்
- உதயர்பாளையம் அரசு பெண்கள் பள்ளி
- ஜெயங்கொண்டம்
- அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
- வடியர்பாளையம்
- முதல்வர்
- முல்லலிகொடி
- ஆசிரியர்
- செல்வராஜ்
- இங்கர்சால்
- தின மலர்
ஜெயங்கொண்டம், செப். 20: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலகச்சுற்றுச்சூழல் தினம் நடைபெற்றது. தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். தாவரவியல் துறை ஆசிரியர் இங்கர்சால் சுற்றுச்சூழல் பற்றியும் ஓசோன் படலத்தின் பாதிப்பு களை எப்படி தடுப்பது, காலநிலை மாற்றம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிலிருந்து சுற்றுபுறத்தை எப்படி காப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார், இதற்கு ஒரே தீர்வு நெகிழியை தடுப்பது, மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்றார்.
இதில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் குறிஞ்சி தேவி ஆசிரியர்கள் சாந்தி, வனிதா, வளர்மதி, மஞ்சுளா, அருட்செல்வி, மாரியம்மள் ,மரகதம்,தமிழாசிரியர் இராமலிங்கம் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை பசுமைப் படை ஒரங்கினைப்பாளர் இராஜசேகரன் நடத்தினார். முடிவில் ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.
The post உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் appeared first on Dinakaran.