×
Saravana Stores

அரியலூர் மாவட்ட வக்கீல்கள் பணிகள் புறக்கணிப்பு

அரியலூர், நவ 12: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்ற நீதிபதி கணேஷ்ஷைக் கண்டித்து, வக்கீல்கள் நேற்று நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், வக்கீல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்தும், அவரை வேறு மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்ய வலியுறுத்தியும் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு, வக்கீல்கள் சங்கத் தலைவர்கள் அரியலூரில் மனோகரன், செந்துறையில் கார்ல்மார்க்ஸ் மன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .

The post அரியலூர் மாவட்ட வக்கீல்கள் பணிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Jayangondam Court ,Judge ,Ganesh ,Jayangondam District Law Court ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீர்களுக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம்