×

கரூரில் போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கத்தினர் வாயிற்கூட்டம்

 

கரூர், செப். 20: கரூர் அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டலம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு மண்டல துணை தலைவர் பூபதி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட துணைச் செயலாளர் மோகன்குமார், சம்மேளன துணை பொதுச் செயலாளர் முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர்.

மண்டல துணை செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காமல் உள்ள பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடைபெற்றது.

The post கரூரில் போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கத்தினர் வாயிற்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AITUC ,Transport Corporation ,Karur ,District Vice President Bhupathi ,Karur Government Transport Corporation ,District Secretary of ,Communist Party of India ,Natrayan ,District Deputy Secretary ,Mohankumar, Sammelana ,Karur Transport Corporation ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்