- மக்களவை நிலைக்குழு
- விவகாரங்களில்
- சசிதரூர் கல்வி
- திக்விஜய் சிங்
- புது தில்லி
- மக்களவை
- ராஜ்ய சபா
- காங்கிரஸ்
- வெளியுறவு விவகாரம்
- தின மலர்
புதுடெல்லி: மக்களவையில் வெளிவிவகாரத்துறை, வேளாண்துறை,கால்நடை ,உணவு பதப்படுத்துதல்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியதுறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவிகளும், மாநிலங்களவையில், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவிகளும் காங்கிரசுக்கு கிடைக்க உள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகய் ஆகியோர் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெளியுறவுத்துறையின் நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறை நிலைக்குழு தலைவராக திக்விஜய் சிங், வேளாண்துறை நிலைக்குழு தலைவராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த எம்பி சப்தகிரி ஒலாகா ஊரக வளர்ச்சி துறையின் நிலைக்குழுவுக்கு தலைமை வகிப்பார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியுறவுத்துறை நிலைக்குழு தலைவர் பதவி காங்கிரஸ் வசம் செல்கிறது.
The post மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.