கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத்கோயல், சுகாதாரத்துறை ஊழியர்களை மாற்றுவது உள்பட 5 கோரிக்கைகளை ஜூனியர் மருத்துவர்கள் முன்வைத்தனர்.
இதில் 3 கோரிக்கைகளை முதல்வர் மம்தா ஏற்றுக்கொண்டார். போலீஸ் கமிஷனர் வினீத்கோயல் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக மனோஜ்குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் 40 வது நாளாக நீடித்து வருகிறது. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை மாஜி முதல்வர் சந்தீஷ் கோஷின் மருத்துவ பதிவை மேற்குவங்க மருத்துவ கவுன்சில் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
The post பெண் டாக்டர் பலாத்காரம் கொல்கத்தா மாஜி முதல்வரின் மருத்துவ பதிவு ரத்து appeared first on Dinakaran.