×
Saravana Stores

குஜராத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி


காந்திநகர்: குஜராத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். குஜராத் மாநிலம் மெக்சானாவில் இரவு 10.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மெக்சானா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் ெபரும் பீதியடைந்தனர்.

பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ெமக்சானாவை போன்று அகமதாபாத் மற்றும் காந்திநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடாஜ், அங்கூர், நியூ வடாஜ் மற்றும் அகமதாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மேலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post குஜராத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Earthquake in ,Gujarat ,Gandhinagar ,National Seismic Centre ,Meksana, Gujarat ,Gujarat Earthquake: Public Panic ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 100 பேர் பத்திரமாக மீட்பு