×

கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை வினியோகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் வீடுகள், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, கிராமங்களில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் மழைநீர் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த முதல்வரின் கனவு திட்டமான  மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்களுக்கு குட்பை எனும் வாசகத்தை வலியுறுத்தும் வகையில் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை  வழங்கி அதனை பயன்படுத்துவதால் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என விளக்கப்பட்டது. இதில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, துணை தலைவர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த புலியூர்  கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சௌரிநாதன் தலைமை தாங்கினார். பணி மேற்பார்வையாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். புலியூர் ஊராட்சியில் மழைநீரை சேகரிக்க புதியதாக நீர்நிலைகள் உருவாக்க வேண்டும். சேகரித்த நீரை பராமரித்து, பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிப்பது, காடுகள் வளர்ப்பது, கிராமங்களில் உள்ள தடுப்பணைகள், குளம், குட்டை, ஏரி என அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்துதல் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Walajahabad ,Devariyambakkam ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...