தஞ்சாவூர், செப்.19: தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு க்கு மாறியுள்ள புதிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு தாமதமின்றி பென்ஷன் வழங்க வேண்டும். 10 ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களையும் CGHSல் சேர அனுமதிக்கவேண்டும்.
மருத்துவப்படியை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை திரும்ப அளிக்க வேண்டும். கம்முட்டேசன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் . பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் . மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை அமலாக்க வேண்டும். மாவட்டம் தோறும் மருத்துவ நல மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செயலாளர் நடராஜா வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன், மத்திய மாநில பொதுத்துறை ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் குருசாமி, மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, பக்கிரிநாதன் வாழ்த்தி பேசினர். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.
The post பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.