தஞ்சாவூர், செப். 19: தமிழ் பல்கலைக்கழகம் பதிப்புத் துறையில் ஆண்டுதோறும் தமிழ்ப்பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் பதிப்புத்துறை நூல்கள் 50 சதவீதம் சிறப்புக் கழிவு விலையில் விற்பனை செய்வது வழக்கம். இந்தாண்டும் 18.09.2024 முதல் 17.10.2024 வரை ஒரு மாத காலத்திற்கு சிறப்புக் கழிவு விற்பனை நடைபெறவுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் குத்துவிளக்கேற்றி சிறப்புக் கழிவு விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், பதிப்புத்துறை இயக்குநர்(பொ) பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் முருகன், புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாய்ப்பினை மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு துணைவேந்தர் திருவள்ளுவன் கேட்டுக்கொண்டார். இந்நூல்கள் பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் கிடைக்கும்.
The post பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அக்.17ம் தேதி வரை சிறப்பு கழிவு விலையில் புத்தகம் விற்பனை appeared first on Dinakaran.