- ஓடுபட்டறை செல்லாண்டியம்மன் கோவில்
- மகா கும்பாபிஷேக்
- குன்னூர்
- செல்லாண்டியம்மன் கோவில்
- ஓடுபட்டறை
- கணபதி ஹோமாம்
- Kumbabhishek
- யாக
- ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன்
- கோவில்
- மகா கும்பாபிஷேக விழா
ஊட்டி, செப். 19: குன்னூரில் ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை பகுதியில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் புனராவர்த்தன பணிகள் நடந்தன. கடந்த 13ம் தேதி கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை துவக்கம், நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி. த்ரவ்யாகுதி, மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10.55 மணிக்கு விமான கலசம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும், மஹாசக்தி செல்லாண்டியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது ஓம் செல்லாண்டியம்மன் தாயே போற்றி என கோஷம் எழுப்பி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மஹா அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. விழாவில், சிறுவர் சிறுமியரின் பரத நாட்டியம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
The post ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.