விழுப்புரம், செப். 19: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் இதர நாட்களில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் மாதம் வரை தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் வெவ்வேறு நாட்களில் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை நவம்பர் மாதம் வரை இயக்குகிறது.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06145) செப்டம்பர் 20,21,22,27,28,29, அக்டோபர் 4,5,6,11,12,13,18,19,20,25,26,27, நவம்பர் 1,2,3,8,9,10,15,16,17,22,23,24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06146) செப்டம்பர் 21,22,23,28,29,30, அக்டோபர் 5,6,7, 12,13,14, 19,20,21, 26,27,28, நவம்பர் 2,3,4, 9,10,11,16,17,18,23,24,25 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள்) காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும், என கூறப்பட்டுள்ளது.
The post விழுப்புரம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.