×

வக்பு வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்பி தேர்வு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் விஜயராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்திற்கான தேர்தல் கால அட்டவணை கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு கே.நவாஸ்கனி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தலில் ஒரு காலியிடத்திற்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தேர்தல் நடத்துதல் விதிகளின்படி கே.நவாஸ்கனி எம்பி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். வக்புவாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ்கனி எம்.பி. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

The post வக்பு வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்பி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Nawaskani ,Waqf Board ,Chennai ,Backward, Backward and Minority Welfare ,Vijayarajkumar ,Tamil Nadu Waqbu Board ,Waqbu Board ,Dinakaran ,
× RELATED வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா..!!