×
Saravana Stores

ட்ரோன் மூலம் விநாயகர் சிலைகள் விஜர்சனம்


திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியபுலங்கா பகுதியில் பாயும் கோதாவரி ஆற்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் இறங்கவோ அல்லது அதனருகில் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி நடந்த நிலையில் சிலைகளை கோதாவரி ஆற்றில் கரைக்க தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து ட்ரோன் மூலம் சிலைகளை கரைக்க முடிவு செய்தனர். அதன்படி ட்ரோன் நிபுணர்களை வரவழைத்து ஊர் மக்களிடம் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க செய்தனர். நேற்று காலை முதல் மாலை வரை நுற்றுக்கணக்கான சிலைகள் ட்ரோன் மூலம் கரைக்கப்பட்டது.

The post ட்ரோன் மூலம் விநாயகர் சிலைகள் விஜர்சனம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Tirumala ,Godavari river ,Katiyapulanka ,East Godavari district ,Andhra Pradesh ,
× RELATED பூங்காவில் இரும்பு ராடு உடைந்து...