ஜெயங்கொண்டம், செப். 18: கடந்த இரண்டு ஆண்டாக வழங்கப்படாத ஓய்வூதியர் பணப்பலன்கள் வழங்க வேண்டும், கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத டி ஏ வழங்க வேண்டும். அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கிட வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் மூன்று பெண்கள் உள்பட 56 பேரை கைது செய்து தனியா திருமணம் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர் சங்கம் மற்றும் பென்சனர் நல சங்கம் திருச்சி பேரவையின் சார்பில்ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் திருச்சி மத்திய சங்க செயலாளர் இளங்கோவன் தலைமையிலும் ஜெயங்கொண்டம் கிளை செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பாலகிருஷ்ணன், கிளைத் தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் துணைத் தலைவர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post மறியலில் ஈடுபட முயற்சித்த 3 பெண்கள் உட்பட 56 ஓய்வூதியர்கள் கைது appeared first on Dinakaran.