- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரள அரசு
- புது தில்லி
- கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை
- கேரள மாநிலம்
- கேரளா
- கேரள அரசு
- தின மலர்
புதுடெல்லி: கேரள மாநில கால்நடை பராமரிப்பு துறை கடந்த ஜூலை 31ம் தேதி புதிய விதியை அறிவித்திருந்தது. அதில், ‘‘கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு உள்ளே கொண்டு வரப்படும் முட்டை ஒன்றுக்கு இரண்டு பைசா வீதம் சோதனை சாவடிகளில் நுழைவு கட்டணம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட அறிக்கைக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘வெளிமாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதுபோன்ற நிலையில் ஒரு முட்டைக்கு இரண்டு பைசா வீதம் ஒரு கோடி முட்டைகளுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கேரள கால்நடை பராமரிப்பு துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மேற்கண்ட மனுவானது கேரளா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘‘தமிழ்நாடு உள்ளிட்ட வேறு மாநிலங்களில் இருந்து வரும் முட்டைகளுக்கு நுழைவு கட்டணம் விதிக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று கேரளா மாநில கால்நடை பராமரிப்புத்துறைக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
The post தமிழ்நாடு முட்டைகளுக்கு நுழைவு கட்டணமா? கேரளா அரசு மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.