×

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மிலாது நபி விழா 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

கோவை, செப். 18: கோவையில் உள்ள தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மீலாது நபி விழா கோவை சாயிபாபாகாலனியில் நேற்று நடந்தது. இதையொட்டி, குழந்தைகள் உள்பட 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதை, பல்சமய நல்லுறவு இயக்க தலைவரும், தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணைய உறுப்பினருமான முகமது ரபி, பேரூர் தம்புரான் உமாபதி, தொழிலதிபர் எம்.எம்.ராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

விழாவில், தோனி சிங், ஜீவன், அஜீஸ், சாயிபாபாகாலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மாநகராட்சி கவுன்சிலர் பேபி சுதா, திமுக பகுதி செயலார் கே.எம்.ரவி, அப்துல் ஜாபர், அபுதாஹீர், முகமது இஸ்மாயில், அப்துல் ரகுமான், ஹஜரத், ஏர்டெல் அபு, ராதாகிருஷ்ணன், ஜீவசாந்தி சலீம், சகானா, உமா சீனிவாசன், திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூரணசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதையொட்டி, அனைவரும் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மிலாது நபி விழா 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Miladu Nabi festival ,Coimbatore ,Saibaba Kalani ,Tamil Nadu ,Multi- ,Community Movement ,Multifaith Movement ,Dinakaran ,
× RELATED மிலாது நபி: தமிழ்நாடு முழுவதும் செப்.17 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை