×

வலி நிவாரண மாத்திரை கேட்டு மெடிக்கல் ஸ்டோரில் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது

பொள்ளாச்சி, செப்.17: பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் ஜமீன்முத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோருக்கு வந்த 3 பேர், கடையில் இருந்த செந்தில் குமார் என்பவரிடம் வலி நிவாரண மாத்திரைகளை கேட்டு உள்ளனர். அவர் தர முடியாது என்று மறுத்து கூறியதால், அத்துமீறி கடைக்குள் புகுந்து மாத்திரைகளை எடுத்ததுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோதி நகரை சேர்ந்த சபரி (26), பவுன் (23), சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பட்டீஸ்வரன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

The post வலி நிவாரண மாத்திரை கேட்டு மெடிக்கல் ஸ்டோரில் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Zameenmuthur ,Pollachi-Palakkad road ,Senthil Kumar ,
× RELATED பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில்...