ஆவடி: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 46, லாசர் நகர் பகுதியில் ரூ.34 லட்சம் மதிப்பிலான 3 புதிய சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜி.உதயகுமார், மண்டல தலைவர் ஜெயபாலன், பகுதிச் செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன் பேபி சேகர், வழக்கறிஞர் வினோத், மாமன்ற உறுப்பினர் மீனாட்சி குமார், வட்டச் செயலாளர் குமார் கலந்து கொண்டனர்.
திருத்தணி: திருத்தணியில் உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி சந்திரன் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றியச் செயலாளர்கள் ஆரத்தி ரவி, கிருஷ்ணன், சண்முகம் பழனி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சிலம்பு பன்னீர்செல்வம், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் சித்திக், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாவட்ட அமைப்பாளர் மத்தூர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பு, தலைமை பேச்சாளர் முரசொலி மூர்த்தி, ஆர்கே பேட்டை சம்பத் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் திமுக சார்பில் ப்எரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆரணி பேரூர் செயலாளர் பி.முத்து தலைமை தாங்கினார். பேரூர் அவைத் தலைவர் ரமேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கோபிநாத், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இதனைத் தொடர்ந்து ஆரணி பேரூர் செயலாளர் முத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் மகேந்திரன், திராவிட சத்தியா, நிர்வாகிகள் தக்காளி ரவி, வழக்கறிஞர் சுரேந்தர், சந்தோஷ் பிரபா, துர்கா, இந்திரா குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புழல்: புழல் மத்திய சிறைச்சாலை அருகிலுள்ள பெரியார் சிலைக்கு புழல் 23 மற்றும் 24வது வார்டு திமுக சார்பில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் புழல் 24வது வார்டு திமுக சார்பில் திமுக நிர்வாகிகள் அகிலா அந்தோணி, எழில் ராவணன், எம்சி வேலு, முரளிவரன், ராஜேஷ் குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் வட்டச் செயலாளர் சுந்தரேசன் தலைமையில் மாதவரம் தெற்கு பகுதி திமுக செயலாளர் துக்காராம் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் கென்னடி, அந்தோணி, அறிவழகன், பிஎஸ்என்எல் நாகராஜ், வக்கீல் கௌதமன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலாஜி, ராபர்ட் கென்னடி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் வட்டச் செயலாளர்கள் விஜயன், சேட்டு, மதிமுக சார்பில் மாதவரம் பகுதிச் செயலாளர் கோபி, ஜெயராமன், அருணாசலம், பன்னீர்செல்வம், திராவிட கழகம் சார்பில் ஆனந்தன், சோமு, வடகரை உதயகுமார், புழல் நட்பு வட்டார நிறுவனர் குணாநிதி, விஜயகுமார், நிர்மல் குமார், சுரேஷ், கபாலி, புழல் கலாம் அறக்கட்டளை சார்பில் நரேஷ் குமார், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் செங்குன்றம் மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உட்பட பலர் மாலை அணிவித்தனர்.
விசிக : திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் குமார், மாவட்ட அமைப்பாளர் கொட்டையூர் செந்தில்ராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மா தசரதன், மாவட்ட நிர்வாகிகள் ராபின், ஜார்ஜ் முல்லர், சுதாகர், சேலை அன்பு, பன்னூர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் விஜயா ஞானசேகரன், இளவரசு, இன்பராஜ், மாவட்ட நிர்வாகிகள் அம்பி, திலக், ராகேஷ், நரேஷ், சுரேஷ், தமிழ்வளவன், முத்துவளவன், பேரம்பாக்கம் செந்தில், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்டம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டம்: பெரியார் சிலை, படத்துக்கு மாலை அணிவிப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.