×

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறந்த சங்கத்தினை தேர்வு செய்ய பதிவு செய்யலாம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல்

 

திருவள்ளூர், நவ. 8: சிறந்த கூட்டுறவு சங்கத்தினை தேர்வு செய்து பாராட்டு கேடயம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா ‘தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு’ எனும் முதன்மை மையக்கருப்பொருளை மையமாககொண்டு வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த சங்கம், வங்கியினை தேர்வு செய்து கூட்டுறவு வார விழாவின்போது பாராட்டு கேடயம் வழங்க ஏதுவாக கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் அதன் விவரங்களை www.rcs.tn.gov.in என்கிற இணைய தள முகவரியில் வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் செயலாட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு கூறியுள்ளார்.

The post கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறந்த சங்கத்தினை தேர்வு செய்ய பதிவு செய்யலாம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cooperative Week ,Thiruvallur ,Zonal ,Coordinator ,T. Sanmugavalli ,71st All India Co-operative Week Festival of Tamil Nadu ,
× RELATED விற்பனையாளர், கட்டுநர்...