×

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பணிமனை அருகே தனியார் கம்பெனி வேலைக்கு பெண்கள், வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேனை பின் தொடர்ந்து வந்த லாரி மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோல், சிலாவட்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இதில், லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டது அரை மணி நேரம் போராடி, காரில் பயணம் செய்த ஒருவரை காயத்துடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மதுராந்தகம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த இரண்டு விபத்துகளால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் அளவில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் அரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Madhuranthakam ,Chennai-Trichy National Highway ,Chengalpattu District, Madhuranthakam ,Madurandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் பாழடைந்த...