×

146வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின. காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். திராவிட கழகம் மாவட்ட தலைவர் அ.வே.முரளி தலைமை தாங்கி மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட செயலாளர் இளையவேல் நிர்வாகிகள் அசோகன், கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநேல்லிபாபு, பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம், ஜெகநாதன், சுப்புராயன், மாவட்ட இளைஞர் அணி யுவராஜ், மகளிர் அணி செல்வி, நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், செவிலிமேடு மோகன், தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன், நகர, ஒன்றிய, நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பகுதிச் செயலாளர்கள் எம்பி ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில், அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியாரின் நினைவு இல்லத்தில் உள்ள உருவச் சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மையம் சார்பில் எஸ்கேபி கோபிநாத் மற்றும் கண்ணன் ஆகியோர் மாலை அனைத்து மரியாதை செலுத்தினார்கள்.

The post 146வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Kanchipuram ,DMK ,Kanchipuram Gangaikondan Mandapam ,
× RELATED ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி அருகே...