×

பெரியார் பிறந்தநாள் விழா; சமூக நீதி உறுதிமொழி ஏற்பு

மதுராந்தகம்: பெரியார் பிறந்தநாள் விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், பெரியார் 146ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று காலை சலவாக்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி சாதி, மத பேதமின்றி கலந்து கொண்ட பொதுமக்களுடன் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பெரியாரின் 146வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் அப்பகுதி கிராமமக்களுக்கு 146 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும், சாலவாக்கம் ஊராட்சியில் பணி புரியும் 50 தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வெங்கடேசன், சிவராமன், சத்யா சக்திவேல், வெங்கட்ராமன், சேகர், அழகப்பன், நந்தா, முரளி, விஷ்ணு உள்ளிட்ட திமுக கட்சியினர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம்: பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது.

இதில், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது, திமுகவினர் பெரியாரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பெரியாரின் கொள்கைகள் குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கடும்பாடி, புல்லேரி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், திமுக நிர்வாகிகள் சுகுமாறன், நல்லூர் பாபு, செங்குட்டுவன், அரிதினேஷ், செல்லப்பன், சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியார் பிறந்தநாள் விழா; சமூக நீதி உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Kanchipuram South District ,K. Sundar MLA ,Salavakkam Union DMK ,Salavakkam ,
× RELATED காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா...