×

சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் 7வது நாளாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட வேண்டி சாம்சங் தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

இதில், 119 பேரை கைது செய்தனர். பின்னர், 116 பேரை விடுதலை செய்தனர். இதனிடையே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி தொழிலாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஜடியு தொழிற்சங்க தலைவர் முத்துகுமார், கப்பேரோ தொழிற்சாலை தொழிற்சங்க நிர்வாகி சசிதரன், சாம்சங் தொழிற்சாலை தொழிற்சங்க நிர்வாகி ரவிகுமார் ஆகிய மூவரையும், விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேர் மீதும் 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி வந்த நிலையில், பின்னர் 41 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு காவல் நிலைய ஜாமீனிலேயே தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

The post சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Samsung factory ,Kanchipuram ,Sunguvarchatram ,Dinakaran ,
× RELATED ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்