- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரள எல்லை
- நீலகிரி
- தமிழிசை —
- கேரளா
- குடலூர்
- நீலகிரி மாவட்டம்
- தமிழ்நாடு எல்லை
- மலப்புரம் மாவட்டம்
- தமிழ்நாடு-கேரள எல்லை
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மூளைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் புனே வைராலஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைகப்பட்டது. அங்கு ஆய்வு செய்ததில் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவர்களின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க நேற்று (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான கூடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
The post நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.