×
Saravana Stores

கோயில் கும்பாபிஷேகம்

கமுதி, செப்.17: கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கணபதி, பாதாள காளியம்மன் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி நடைபெற்றது.பின்னர் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிடுவதை கண்டு, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப் பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை பல்வேறு பகுதியில் உள்ள இக்கிரமத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Temple ,Kumbabhishekam ,Kamudi ,Maha Kumbabhishek ceremony ,Ganapati ,Patala Kaliamman temple ,Pattatharasi Amman temple ,Thaliva Nayakkanpatti ,Vigneswara Puja ,
× RELATED கமுதியில் மழையால் பாதிப்படைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்