- கிளிமூலம்பேடு ஊராட்சி அலுவலகம்
- Kummidipoondi
- கிளிமுளம்பேடு ஊராட்சி
- கவரப்பேட்டை பஜார்
- தெலுங்கு காலனி
- ராஜா தெரு
- சத்தியவேடு சாலை
- பாலவேக்காடு சாலை
- அரியதுரை
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பழுடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியில் கவரப்பேட்டை பஜார், தெலுங்கு காலனி, ராஜா தெரு, சத்தியவேடு சாலை, பழவேற்காடு சாலை, அரியத்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரேஷன் கடை, அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம், விஏஓ அலுவலகம், நூலக கட்டிடம், கிராம சேவை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுப்புற பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திற்குச் சென்று ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், தலைவர் வார்டு உறுப்பினர்களிடம் தங்கள் பகுதியில் குப்பை அப்புறப்படுத்துவது, சாலை அமைப்பது, குளம் தூர்வாருதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த ஒரு குறைபாடுகளையும் சொல்வது வழக்கம்.
இந்நிலையில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் வர்தா புயல், சுனாமி, கன மழை காரணமாக பாதிப்படைந்து மேல் தளங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது. தாங்கள் வந்து செல்லும்பொழுது மேற்கூறையில் இருந்து கான்கிரீட் கீழே விழுந்து விடுமோ என அச்சத்தில் பொதுமக்கள் வராமல் சாலையில் நின்றே தங்கள் கோரிக்கைளை தலைவரிடம் கூறிச் செல்கின்றனர். கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஊராட்சி செயலாளர் ஹரி ஆகியோர் தினந்தோறும் இடிந்து விழும் நிலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் மற்றும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று, உடனடியாக பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர வேண்டுமென திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.