×

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: போலீசில் மணப்பெண் புகார்

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் ஸ்ரீதரன் (29), பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பெங்களூருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுசியா (29) பணியாற்றும்போது இருவரிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இணைந்து காதல் ஜோடிக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக திருத்தணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இரு குடும்பத்தினரின் உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மணமகளுக்கு தாலி கட்டவிருந்த நேரத்தில் மணமகன் திருமண மண்டபத்திலிருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. தனது மகன் காணவில்லை என்று ஸ்ரீதரனின் தந்தை கோவிந்தசாமி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதே நேரத்தில், மணமகள் அனுசியா வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து ஸ்ரீதர் மீது புகார் அளித்தார். அதில், சாதியை காரணம் காட்டி ஸ்ரீதர் பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்ரீதரனை தேடி வருகின்றனர்.

The post தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: போலீசில் மணப்பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Govindaswamy ,Arakkonam Palanipet, Ranipet district ,Sreedharan ,Bangalore ,Murugesan ,Bengaluru ,Bride ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு வங்கியில் திடீர் தீ மேலாளர்...