×

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

திருவள்ளூர்: சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சபையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. செப்டம்பர் 16 ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஐநா இந்தநாளை நிறுவியது.

பூமியின் அடுக்கு மண்டலத்தின் இந்த அடுக்கு பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 முதல் 18 மைல்களுக்கு மேல் அமைந்துள்ளது. நமது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஓசோன் படலம் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வருடத்திற்கான கருத்துரு “மாண்ட்ரீல் நெறிமுறை காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துதல்” ஓசோன் படலத்திற்கு ஒரு முக்கிய பணி உள்ளது. அது சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் பெரும்பகுதியை உறிஞ்சுவதாகும்.

புற ஊதா கதிர்வீச்சின் அதிகப்படியான வெளிப்பாடு நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புற ஊதா கதிர்கள் சூரிய ஒளி, முன்கூட்டிய முதுமை, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் மற்றும் கண் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதிகப்படியான புற ஊதா கதிர்கள் தாவரங்களின் வளர்ச்சி செயல்முறையைத் தடுக்கின்றன. இது நிகழும்போது, ​​​​உலகளாவிய உணவு விநியோகத்தைக் குறைப்பதன் மூலம் சில இனங்கள் அழிந்து வருகின்றன. ஹைட்ரோகுளோரோ புளோரோ கார்பன்களும், குளோரோ புளோரோ கார்பன்களும், ஓசோன் படலத்திற்கு சிதைவை ஏற்படுத்துகின்றன.

இவை குளிரூட்டிகளில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள். இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், எச்எப்சிகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. 2005 முதல், ஓசோன் சிதைவு 20 சதவீதம் குறைந்துள்ளது. 2030களில் வடக்கு அரைக்கோளத்திலும், 2050களில் தெற்கு அரைக்கோளத்திலும் ஓசோன் முழுமையாக குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேச ஓசோன் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நேற்று விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.

இதில் 200 தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் 200 கல்லூரி மாணவர்களின் பேரணி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலிருந்து திருவள்ளூர் பேருந்து நிலையம் வரை சென்றது. இந்த பேரணிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ஸ்ரீலேகா முன்னிலை வகித்தார்.

இந்த பேரணியை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பிறகு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் மஞ்சபையுடன், மரக்கன்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

* காப்பதற்கான வழிமுறைகள்
ஓசோன் படலத்திற்கு ஆபத்தான வாயுக்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும். கார்களின் பயன்பாட்டைக் குறைக்கவும். பொது போக்குவரத்து, சைக்கிள் மற்றும் மின் வாகனங்களை பயன்படுத்தவும். உள்ளூர் பொருட்களை வாங்கவும். இதன் மூலம் அதிக தூரம் ​​​​அந்த பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ஊர்திகள் காரணமாக அதிக நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுவதை தடுக்கலாம். குளிர் சாதனப் பொருட்களை பராமரிக்கவும். அவற்றின் செயலிழப்புகள் குளோரோ ப்ளோரோ கார்பன் வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியேற காரணமாகின்றன.

குளிர்பதனப் பொருட்களின் ஓசோனை சிதைவுபடுத்தும் பொருட்கள் சரியாக மீட்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட அதனை ஒரு தொழில்நூட்ப வல்லுநரால் கையாளப்படுவதை உறுதி செய்யவும். மின்சாதனங்களை அப்புறப்படுத்தும்போது குளிரூட்டும் குழாய்கள் சேதப்படுத்தக்கூடாது. எனர்ஜி ஸ்டார் லேபிள்கள் உள்ள உபகரணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹைட்ரோ குளோரோ ப்ளோரோ கார்பன் வாயுக்களை பயன்படுத்தாத குளிர்சாதன உபகரணங்களை பயன்படுத்தவும். சுற்றுச் சூழலுக்கு உகந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்குவிக்கவும்.

*2 030களில் வடக்கு அரைக்கோளத்திலும், 2050களில் தெற்கு அரைக்கோளத்திலும் ஓசோன் முழுமையாக குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

The post சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : International Ozone Day ,Tiruvallur ,Revenue ,Commissioner ,A. Kalpakam ,International Day for the Protection of the Ozone Layer.… ,International Ozone Day: ,
× RELATED செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்