×

டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், செவல்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(43). திருவள்ளுவர் நகர் மின்வாரிய அலுவலக மின் பாதை ஆய்வாளர். நேற்று முன்தினம் மாலை முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து ராஜபாளையம் சேத்தூர் ஊரக போலீசில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், ராஜபாளையம் மேற்கு பகுதியில் உள்ள புல்லுப்பத்தி மலை அடிவாரத்தில் இருப்பதாக காட்டியது. அங்கு சென்று பார்த்தபோது டிரான்ஸ்பார்மரில் ஜெயபிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

The post டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Rajapalayam ,Jayaprakash ,Sewalpatti, Rajapalayam, Virudhunagar district ,Thiruvalluvar Nagar Electricity Board Office ,Line ,Rajapalayam Chetur Rural Police ,
× RELATED அதிக தொகை கோரிய அதானி நிறுவனம்...