சென்னை: எல்ஐசி நிறுவனம் இன்போஸிசுடன் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை அமைக்க உள்ளது. எல்.ஐ.சி டிஜிட்டல் மாற்றத்திற்கான DIVE (Digital innovation and value enhancement) என்னும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த டிஜிட்டல் இயங்குதளத்தை மேம்படுத்தி வாடிக்கையாளர்கள், களப்பணியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன எல்.ஐ.சி இத்திட்டத்தை தொடங்கி உள்ளது. மேலும், அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை கட்டமைத்து ஒருமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் காப்பீட்டு தீர்வுகளை வழங்கவும் உயர்தர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், வணிக மேற்பார்வை மற்றும் விற்பனை பிரிதிநிதிகளுக்கான இயங்கு தளங்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் முன்-முனை இயங்குதளங்கள் போன்றவற்றை அமைக்கவும் இன்போஸிஸ் நிறுவனத்தை எல்.ஐ.சி நியமித்துள்ளது.
இது, நவீனம், சூழலுக்கேற்ப மாறுபடும் தன்மை, க்ளவுட்- தன்மை மற்றும் இயங்குதளம் மூலம் செயல்படும் கட்டமைப்பை கொண்டதாக இருக்கும். இதன் மூலம் புதுவகை தொழில்நுட்பம், புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பம்சங்களை உடனடியாக செல்படுத்த முடியும். வாடிக்கையாளர் அண்டு விற்பனை செயலிகள், போர்டல் மற்றும் டிஜிட்டல் கிளை போன்ற உயர்தர வணிகச்செயலிகளை கட்டமைக்க இந்த இயங்குதளம் உதவியாக இருக்கும்.
இதுகுறித்து, எல்ஐசி முதன்மை செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான சித்தார்த்த மொஹந்தி கூறுகையில், ”எல்.ஐ.சியை தொழில்நுட்பம் மூலம் ஆயுள் காப்பீட்டு தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இன்போஸிஸ் உடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகத்தரமான டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் உயர்தரமான சேவையை எல்ஐசி பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை பிரிதிநிதிகளுக்கும் அளிப்பதை ஆர்வமுடன் எதிர் நோக்குகிறோம். தற்பொழுது டிஜிட்டல் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விற்பனையின் போதும் மற்றும் அதன் பிறகும் வாடிக்கையாளர்களுடைய தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும். தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களை பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்ளவும் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த டிஜிட்டல் முறைகளை பயன்டுத்தி மிகச் சிறந்த சேவைகளை அளிக்கவும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இன்போஸிசுடன் இணைந்து டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கிறது எல்ஐசி appeared first on Dinakaran.