சென்னை: மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பரிலும் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி, புதுச்சேரியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராமபட்டினம், கடலூர், திருச்சியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
The post தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது appeared first on Dinakaran.