- எம்.பி.பி.எஸ்
- சத்தீஸ்கர்
- ராய்ப்பூர்
- முதல் அமைச்சர்
- விஷ்ணு தியோ சாய்
- விஷ்ணுத்யோ சாயி
- உத்திரப்பிரதேசம்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இந்த ஆண்டு முதல் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு வழங்கப்படும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார். இந்தி திவாஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணுதியோ சாய் கூறுகையில்,’ 2022ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியில் மருத்துவக் கல்வியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது விருப்பம் அடிப்படையில் எங்கள் அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. எம்பிபிஎஸ் படிப்பு இனி இந்தியிலும் கற்பிக்கப்படும். இந்த கல்வியாண்டில் இந்தியில் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும்’ என்றார்.
The post சட்டீஸ்கரில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு appeared first on Dinakaran.