×

உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும் கோவை அன்னபூர்ணா சீனிவாசன் பேசிய தொனிமுறை மாறுபட்டிருக்கலாமே தவிர, கருத்து ஒன்றுதான். இதை யாரும் அரசியலாக்க கூடாது. இதனால் உணவக வணிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றாலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களம் இறங்க தயங்காது. அரசியல் உள்நோக்கம் இன்றியே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயல்படும்.மேலும், வணிகர்களுக்கான இடையூறுகள், தடைகளை தகர்த்தெறிய பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Wickramaraja ,Chennai ,Federation of Tamil Nadu Chamber of Commerce ,President ,
× RELATED பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு...