- ஆந்திரப் பிரதேசம்
- சித்தூர்
- ஆந்திர அரசு
- திருப்பதி
- பெங்களூரு
- பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை
- மோகினி காட்
- பலமனேர் மண்டல், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம் மோகினி காட் என்ற பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை திருப்பதியில் இருந்து பெங்களூரை நோக்கி பயணிகளுடன் ஆந்திர அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சித்தூர் நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்துகொண்டிருந்தது. மலைப்பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் சென்று அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் 8 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
The post ஆந்திராவில் அரசு பஸ்- லாரி மோதி 8 பேர் பலி 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.