×
Saravana Stores

சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: கேடயமாக விளங்கும் அரசியலமைப்பு: மணீஷ் சிசோடியா!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை அடுத்து சிபிஐ கைது நடவடிக்கையில் இருந்தும் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலை ஆகிறார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். டெல்லி தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா;

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது வேறொன்றும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறினார். முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ராமரின் ஆசிர்வாதமும், அரசியலமைப்பின் பாதுகாப்பும், நாட்டு மக்களின் அன்பும் உள்ளதாக மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இவை மூன்றும் உள்ள வரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாதகம் ஏதும் நேரிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: கேடயமாக விளங்கும் அரசியலமைப்பு: மணீஷ் சிசோடியா!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,CBI ,Delhi ,Aam Aadmi Party ,Supreme Court ,Chief Minister ,Kejriwal ,Manish Sisodia ,
× RELATED குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை...