- சித்தூர் கலக்கடா
- சென்னை
- சித்தூர் கலகதா
- பைபாஸ் சாலை
- திருப்பதி மாவட்டம்,
- சந்திரகிரி மண்டலம், பக்கராபேட்டை மலை சாலை
*3 பேர் பலி
திருமலை : திருப்பதி மாவட்டம் சந்திரகிரி மண்டலம், பாக்கராபேட்டை மலைப்பாதை பைப்பாஸ் சாலையில் நேற்று சித்தூர் கலக்கடாவில் இருந்து சென்னைக்கு தக்காளி ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, அங்கு சென்றுகொண்டிருந்த கார் மற்றும் பைக் மீது மோதியதுடன் லாரி கார் மீது கவிழ்ந்தது.
இதில் கார் லாரிக்கு அடியில் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். காருக்குள் இருந்த வாலிபர், லாரியில் அடியில் சிக்கி, காப்பாற்றும்படி கதறி அழுதார். இவை அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது மனம் பதறியது.
இதற்கிடையே கார் பின்னால் வந்த பைக் மீதும் லாரி கவிழ்ந்தது. படுகாயமடைந்த இருவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் அவர்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தின்போது விபத்துக்குள்ளான லாரியில் இருந்து சாலையில் சிதறி கிடந்த தக்காளி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அதீ வேகமே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தக்காளி ஏற்றி சென்ற லாரி கார் மீது கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து ஏற்பட்ட இடத்தை திருப்பதி எஸ்பி சுப்பா ராயுடு பார்வையிட்டார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் பைபாஸ் சாலையில் அதிகளவில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
The post சித்தூர் கலக்கடாவில் இருந்து சென்னைக்கு தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து கார் நசுங்கியது appeared first on Dinakaran.