- அங்கன்வாடி பணியாளர்கள்,
- ஜெயங்கொண்டம்
- தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்
- ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்
- ஆண்டிமடம்
- ஜனாதிபதி
- உத்திரமேரி
- அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்
ஜெயங்கொண்டம், செப். 13: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வெறும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிமடம் வட்டார தலைவி உத்திரியமேரி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேட் 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ26,000 உதவியாளருக்கு ரூ21,000 வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடைத்தொகை ரூ10 லட்சம் உதவியாளருக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவியாளருக்கு குறைந்தபட்சம் DA உடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ9000 வழங்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் செயலாளர் உமா, பொருளாளர் சாந்தி, ஜெயலஷ்மி மற்றும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.