- ISL பொருந்தி
- கொல்கத்தா
- இந்திய சூப்பர் லீக்
- ஐ.எஸ்.எல் கால்பந்து
- மும்பை சிட்டி எப்.சி
- மோகன் பகான் எஸ்.ஜி
- தின மலர்
கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 11வது தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. நாட்டின் முக்கிய கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி, முன்னாள் சாம்பியன்கள் மோகன்பகான் எஸ்ஜி, சென்னையின் எப்சி, பெங்களூர் எப்சி, ஐதராபாத் எப்சி உட்பட 13 அணிகள் களம் காண உள்ளன. இதில் 13வது அணியாக, நாட்டின் பழமையான முகமதன் எஸ்சி கிளப் புதிதாக இணைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2முறை உள்ளூர், வெளியூர் அரங்கங்களில் மொத்தம் 24 ஆட்டங்களில் விளையாடும். முதல் கட்டமாக வெளியான டிச.30ம் தேதி வரை நடைபெறும் ஆட்டங்களுக்கான அட்டவணையின்படி இன்று லீக் சுற்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மோகன் பகான்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இடையில் இந்திய தேசிய அணி வியட்னாம், லெபனான் உடன் சர்வதேச களத்தில் விளையாட உள்ளதால் அக்.6 முதல் 16வரை ஐஎஸ்எல் ஆட்டங்கள் நடக்காது. இரண்டவது கட்ட லீக் சுற்று ஆட்டங்கள், பிளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
* ஆடும் சென்னை
சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மாலை புவனேஸ்வரத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஒடிஷா அணியுடன் மோதுகிறது. சென்னை ஆடவுள்ள 14 ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் 6ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அவை
நாள் நேரம் எதிரணி
செப்.26 இரவு 7.30 முகமதன் எஸ்சி
அக்.24 இரவு 7.30 எப்சி கோவா
நவ.9 மாலை 5.00 மும்பை சிட்டி எப்சி
டிச.7 மாலை 5.00 ஈஸ்ட்பெங்கால் எப்சி
டிச.11 இரவு 7.30 ஐதராபாத் எப்சி
டிச.28 இரவு 7.30 பெங்களூர் எப்சி
The post இன்று முதல் 11வது சீசன்: ஐஎஸ்எல் கால்பந்து தொடக்கம் appeared first on Dinakaran.