×

துளிகள்

* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நஜ்முல் ஹோசைன் சான்டோ(கேப்டன்), மஹ்முதுல் ஹசன், ஜாகிர் ஹசன், ஷாதமன் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரகீம், ஷாகிப் ஷசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தய்ஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் முகமது, தஸ்கின் அகமது, சையத் காலெத், ஜாகீர் அலி ஆகியோர் இடம் பெற்றுளளனர்.
* ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபபெறும் துலீப் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் நாளான நேற்று இந்தியா ஏ, டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏ அணி ஆட்ட நேர முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 288ரன் எடுத்துள்ளது. இந்திய பி, சி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சி அணி 5 விக்கெட் இழந்து 357ரன் குவித்துள்ளது. ஏ அணியில் இஷான் கிஷண் 111, பாபா இந்தரஜித் 78, சாய் சுதர்சன் 43ரன் எடுத்தனர்.
* ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான நொய்டா டெஸ்ட் ஆட்டம், தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் மழை, ஆடகளத்தின் தன்மை காரணமாக கைவிடப்பட்டது.
* மெக்சிகோவில் நடைபெறும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் மெக்சிகோ வீராங்கனை கமிலா ஒசோரியா, ரஷ்ய வீராங்கனை கமில்லா ராகிமோவா ஆகியோர் இன்று மோதுகின்றனர்.

The post துளிகள் appeared first on Dinakaran.

Tags : Drops ,Bangladesh ,India ,Najmul Hossain Santo ,Mahmud Hasan ,Zakir Hasan ,Shadaman Islam ,Mominul Haque ,Mushfiqur Rakim ,Shakib Shasan ,Liton Das ,Dinakaran ,
× RELATED இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை